2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பால் குடித்த மாணவிகள் வைத்தியசாலையில்

A.P.Mathan   / 2011 ஜூன் 03 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.ஜி.கருணாரத்ன)

பால் குடித்தமையால் ஒவ்வாமை ஏற்பட்ட பொலனறுவை றோயல் கல்லூரியை சேர்ந்த 10 மாணவிகள் இன்று பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கல்லூரியின் பிரதியதிபர் கூறுகையில்...

'கல்லூரியிலுள்ள பால் விற்பனை நிலையத்தில் பால் குடித்த 10 மாணவிகள் தொடர்ந்து வாந்தி எடுக்கத் தொடங்கினர். வயிற்று வலியாலும் அவதிப்பட்டனர். அவர்களை உடனடியாக பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம். இதேவேளை பொலனறுவை சுகாதார அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...' என்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் குறித்த பால் விற்பனை நிலையத்தினை மூடியதோடு விற்பனை செய்த பாலின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்தும் சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிகள் ஆபத்தான கட்டத்தினை தாண்டிவிட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X