2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அஹதியா சன்மார்க்க பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
முஸ்லிம் கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட அஹதியா சன்மார்க்க பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது சீருடைகள், பாடசாலைகளின் வாசிகசாலைகளுக்கு புத்தக பொதிகள், மத்ரஸாக்களுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்கான பாடதிட்டமும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எம்.எச்.நூறுல் அமினும் திணைக்கள அதிகாரிகளும் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X