Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 17 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருணாகல், மாவத்தகம நகரப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர என்று மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த அறுவருமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் அநுராதபுரத்திலிருந்து தங்களது சொந்த இடமான ஹத்தரலியத்த நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இருவரின் சடலங்கள் குருணாகல் வைத்தியசாலையிலும் ஏனையவர்களின் சடலங்கள் மாவத்தகம வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர். Pix By :- Pushpakumara Jayaratne
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025