2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் 6ஆம் கட்டை காட்டுப் பகுதியில் கட்டுத்துவக்கொன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் தில்லையடிப் பகுதியைச் சேர்ந்த ரி.யோகராஜா என்பவர் தொழில் நிமித்தம் குறித்த காட்டுப்பகுதிக்கு தனது நண்பர்களுடன் சென்ற போதே அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.

இதனால் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சென்றவர்கள் உடனடியாக அவரை புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை புத்தளம் வைத்திசாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X