2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நுவரவாவி, திஸாவாவி குளங்களின் நீர் மாசடைவதாக விசனம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் புதிய நகரம் உட்பட அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் பழைய நகரப் பகுதிகளுக்கும் குடிநீரை வழங்கும் நுவரவாவி மற்றும் திஸாவாவி ஆகிய குளங்களின் நீர் மாசடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரவாவிக்கு அருகாமையிலுள்ள சுற்றுலா விடுதி மற்றும் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் கழிவுகள், மனித கழிவுகள் மற்றும் மிருகங்களின் கழிவுகள் இந்த குளத்தில் கலப்பதாலேயே அவற்றின் நீர் மாசடைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதேவேளை, திஸாவாவியின் நீரிலும் சுற்றுலாவுக்காக வருகை தருவோர் கழிவுகளை இடுவதால் நீர் மாசடைந்து வருகிறது.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள  அதிகாரிகள் உள்ளிட்ட குழவொன்றைத் தயார் செய்து குறித்த பகுதிகள் தொடர்பாக கண்டறிய நடவடிக்கை எடுப்பதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X