2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மரமுந்திரிகை செய்கையினை விருத்தி செய்ய திட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 27 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம், பொலன்னறுவை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையினை விருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக அநுராதபுரம் மாவட்டத்தினுள் சுமார் 5,000 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பயிரிடப்பட்டுள்ளதோடு தற்போது இவ்வலயத்தினுள் நிலவும் சமாதானச் சூழல் காரணமாக மரமுந்திரிகை பயிர்ச்செய்கையினை விருத்தி  செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வலய முகாமையாளர் எஸ்.டீ.வருஷவிதான தெரிவித்தார்.

அரசாங்கத்தின் திவிநெகும திட்டத்தின் கீழ்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் இவ்வருடம் அநுராதபுரம் மாவட்டத்தினுள் கிராம சேவகர் மட்டத்தில் 150,000 விதை மற்றும் மரமுந்திரிகை கன்றுகளை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் புதிதாக 450 ஏக்கரில் மரமுந்திரிகை நடும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டதில் 538 குடும்பங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களுக்குத் தேவையான மரமுந்திரிகைக் கன்றுகள், உரவகைகள் மற்றும் ஆலோசனைகளும் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படவுள்ளதோடு மூன்று வருட காலத்திற்கு 1700 ரூபா வீதம் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இதேவேளை வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மரமுந்திரிகைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X