2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிலாபம் நஸ்ரியா தேசிய பாடசாலையின் பொன் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பம்

Super User   / 2011 ஜூன் 28 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

சிலாபம் நஸ்ரியா தேசிய பாடசாலையின் 50ஆவது வருட நிறைவை முன்னிட்டு பொன் விழா கொண்டாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

பாடசாலை அதிபர் எம்.பதுருஸ்ஸமானின் தலைமையில் ஆரம்பமான பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் வட மேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க பிரதம அதிதியாகவும் மாகாண அமைமச்சர்கள், மாகாண சபை உறுப்பிணர்கள் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டானர்.

இதன்போது பாடசாலையின் போஷகர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நஸ்ரியா தேசிய பாடசாலையின் பொன்விழா கொண்டாட்ட இறுதி நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகவும் அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன, ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக், முத்தலிப் பாவா பாருக், வட மேல் மாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0

  • A.S. Jaleel Thursday, 30 June 2011 02:49 AM

    நான் ஜலீல் மதுரங்குழி, ஏன் எங்களை மறந்து விடீர்களா? நானும் நஸ்ரியா பாடசாலைக்கு ஒரு பழைய மாணவன் தான். ஏதேனும் இருந்தால் எங்களையும் சேர்த்துக்கொள்ளளவும். நன்றியுடன்,
    பழைய மாணவன்.
    ஜலீல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X