Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 30 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
சிறுமியொருவருக்கு பாலியல் தொடர்பான வீடியோக் காட்சிகளைக் காண்பித்து அவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்;படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம், கல்குளம், தோனிமான்குளம் பகுதியைச் சோர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
15 வயதுடைய சிறுமியொருவர் வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது அவருக்கு கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பாலியல் தொடர்பான வீடியோ காட்சிகளைக் காண்பித்துள்ள சந்தேக நபர், அவரை துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரிடமிருந்து தப்பிச் சென்றுள்ள சிறுமி, அவரது தந்தையிடம் சம்பவம் குறித்து விளக்கவே தந்தையும் சந்தேக நபரின் கையடக்கத்தொலைபேசியைப் பெற்று பரிசோதித்துப் பார்த்துள்ளார்.
இதனையடுத்து அவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
IBNU ABOO Saturday, 02 July 2011 03:01 AM
இவர் பாலியல் கல்வி செயல் முறை போதனாசிரியரோ ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025