2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Super User   / 2011 ஜூலை 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.எம்.அன்வரினை கௌரவிக்கும் நிகழ்வும் புதிய அதிபரான எம்.எச்.எம். ராசிகை வரவேற்கும் வைபவமும் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இக்கல்லூரியில் சுமார் 25 வருடங்களாக ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பிரதி அதிபராகவும், அதிபராகவும் கடமையாற்றி எஸ்.எம்.எம். அன்வர் கடந்த ஜுன் 30ஆம் திகதி ஒய்வுபெற்றார்.

இதேவேளை, இக்கல்லூரியின் புதிய அதிபராக எம்.எச்.எம். ராசிக் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வுகளில் கல்வி தினைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X