2025 ஜூலை 19, சனிக்கிழமை

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை முன்னிட்டு விசேட ரயில் பஸ் வேவை

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம்- மிஹிந்தலைக்கிடையில் ரயில் பஸ் வேவையொன்றினை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அநுராதபுரம் புகையிரத கட்டுப்பாட்டாளார் எம்.ஜே.மனதுங்க தெரிவித்தார்.

இதற்காக மிஹிந்தலை புகையிரத நிலையத்தில் புதிய கட்டுப்பாட்டாளர் ஒருவர் உட்பட அலுவலக ஊழியர்களும் மற்றும் வீதி ஒழுங்கு படுத்தும் ஊழியர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை அநுராதபுரம் புகையிரத நிலையத்தினை புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு சகல வசதிகளுடன்  கூடிய ஓய்வறையொன்றை அமைக்க போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X