2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஐ.தே.க. வேட்பாளர்கள் நால்வர் ஐ.ம.சு.மு.வில் இணைவு

Menaka Mookandi   / 2011 ஜூலை 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அநுராதபுரம் மத்திய நுவரகம் பலாத்த பிரதேச சபைக்கு போட்டியிட்ட நான்கு வேட்பாளர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளனர்.

இவர்கள் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்காவினைச் சந்தித்து 200 ஆதரவாளர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டடைப்பு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையிட்டு இவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் பேர்டியிட்ட ருவன் வன்னி ஆராய்ச்சி| இந்துனில் துஷார| விராஜ் அமரதுங்க| ரவி சங்ககே திஸாநாயக்கா ஆகியோரே  இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்தரக் கட்சியில் இணைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X