2025 ஜூலை 19, சனிக்கிழமை

மீள் எழுச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் நான்கு கிராமங்கள் தெரிவு

Kogilavani   / 2011 ஜூலை 14 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)
மீள் எழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் நான்கு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாலச்சோலை, புழுதிவயல், உடப்பு மற்றும் மதுரங்குளி ஆகிய பிரிவுகளே இவ்வாறு அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நான்கு பிரிவுகளிலும் முதற்கட்ட பணியாக வீதி புனரமைப்பு வேலைகளுக்காக உடப்பு பிரிவுக்கு பதினைந்து இலட்சம் ரூபாவும், ஏனைய மூன்று பிரிவுகளுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கிடப்பட்டுள்ளன.

இந் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளிலும் மீள் எழுச்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக சுமார் ஆறு கோடியே நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதில் பாலச்சோலை பிரதேசத்திற்கு  ஒரு கோடியே எழுபத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி நாலாயிரம் ரூபாவும், புழுதிவயல் பிரதேசத்திற்கு ஒரு கோடியே ஐம்பத்தி இரண்டு லட்சத்து முப்பத்தி நாலாயிரம் ரூபாவும், உடப்பு பிரதேசத்திற்கு இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்சத்தி முப்பத்தி ஆறாயிரம் ரூபாவும், மதுரங்குளி பிரதேசத்திற்கு ஒரு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்தி பதினெட்டாயிரம் ரூபாவும்  ஒதுக்கிடப்பட்டுள்ளன.

இவ்வேலைத் திட்டங்களின் கீழ் சுயதொழில் கடன் வழங்குதல், வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், குளங்கள் புனரமைப்பு உட்பட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கடந்த ஆண்டு முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் மீள் எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கட்டைக்காடு, வேலுசுமனபுர, கணமூலை தெற்கு, நல்லாந்தழுவை மற்றும் முக்குத் தொடுவா ஆகிய ஐந்து கிராம அலுவலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X