Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 15 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாணத்தில் காணி உரிமைகளைத் தக்கவைப்பதற்காக பால்ய வயதுத் திருமணங்களை நடத்திவைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதனால் இள வயதுச் சிறுமிகள் தாய்மையடையும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் இதனால் பல்வேறு சமூகப் பிரப்பினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
வடமத்திய மாகாணத்திலுள்ள ஹொரவப்பொத்தானை, மகாவிலச்சிய, மெதிரிகிரிய, மீகஸ்வெவ, வடிகவெவ, வெலிகந்த மற்றும் அரலகன்வில ஆகிய கிராமங்களிலேயே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவில் பின்னடைந்து காணப்படுவதும் இவ்வாறான பால்ய வயதுத் திருமணங்களுக்கு காரணமாகியுள்ளதாக மேற்படி சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025