2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

28 கிலோ மான் இறைச்சியுடன் புத்தளத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது

Menaka Mookandi   / 2011 மே 05 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், தப்போவ, அபயபூமி பிரதேசத்தில் சுமார் 28 கிலோகிராம் நிறையுடைய மான் இறைச்சியுடன் பயணித்த முச்சக்கரவண்டியொன்றை சோதனையிட்ட பொலிஸார் அதில் பயணம் செய்த சந்தேக நபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், குறித்த பிரதேசத்தில் நீண்ட காலமாக மான் வேட்டையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்று புத்தளம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 30ஆயிரம் ரூபாவினை தண்டப் பணமாக அறவிட நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X