2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

40 வருடங்களின் பின் நொச்சியாகம ஒழுபெந்துருவௌ குளம் புனரமைப்பு

Kogilavani   / 2011 ஜூன் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                                                       

நொச்சியாகம ஒழுபெந்துருவௌ குளம் 40 வருடங்களின் பின்னர் இருபது இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.

இதன் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கபட்டன.

இக்குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக கமநல சேவைகள் மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நிதியினை ஒதுக்கியிருந்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தினுள் 2000 குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்ட்தின் கீழ் இக்குளமும் புனரமைக்கப்படவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில், கமநல சேவைகள் மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ பிரதி அமைச்சர் டபளயூ.பீ.ஏக்கநாயக்க, அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொணடனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X