2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

8 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடியவர் கைது

Super User   / 2011 மே 14 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

பெண்ணொருவரின் பயணப் பையிலிருந்த  சுமார் 8 லட்சம் பெறுதியான 20 பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் புத்தளம் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் காணாமல் போன நகைகளையும் மீட்டுள்ளனர்.

புத்தளம் நாகவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண்ணும் அவரின் கணவரும் கடந்த 9 ஆம் திகதி முச்சக்கர வாகனமொன்றில் திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக சென்றிருந்தவேளையில் பயணப்பையையும் முச்சக்கர வாகனத்தில் வைத்துவிட்டு இறங்கியுள்ளர்.

இத்தம்பதியும் முச்சக்கர வாகன சாரதியும் திரும்பி வந்து பார்த்தபோது அப்பயணப்பை திறந்து கிடப்பதைக் கண்டனர். அதிலுள்ள நகைகள் காணாமல் போயுள்ளமை குறித்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் இன்று சனிக்கிழமை சந்தேக நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 20 பவுண் நகைகளையும் மீட்டனர்.  சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X