2024 மார்ச் 28, வியாழக்கிழமை

SLT-Mobitel உதயம்

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) மற்றும் SLT மொபிடெல் தமது ஒன்றிணைந்த SLT-MOBITEL எனும் வர்த்தக நாம அடையாளத்தை ஸ்ரீ லங்கா ரெலிகொம் தலைமையகத்தில் வெளியிட்டிருந்தன. 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பத்தால் இயங்கும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும், மற்றும் SLT-MOBITEL இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும்.

ஒன்றிணைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றவற்றின் அறிமுகம் இந்நிகழ்வின் போது இடம்பெற்றதுடன், இதில், ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா, SLT Mobitel இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் இதர பிரதான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

163 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியினால் நாட்டின் இணைப்புத்திறனுக்கான தேவை நிவர்த்தி செய்யப்பட்டு வருவதுடன், நிலையான, மொபைல் மற்றும் இதர செயற்பாட்டு பிரிவுகளில் இயங்குவதனூடாக நிலையான தொலைபேசிச் சேவைகளை வழங்குவதில் அசைக்கமுடியாத நாமமாக SLT திகழ்வதுடன், மொபைல் சேவைகளை வழங்குவதில் மொபிடெல் முன்னோடியாகத் திகழ்கின்றது. SLT மற்றும் மொபிடெல் ஆகியன இணைந்து நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தியுள்ளதுடன், டிஜிட்டல் மயமாக்கத்தினூடாக மக்களுக்கு வலுவூட்டுவதுடன், வியாபாரங்களை மாற்றியமைத்துள்ளன.

நுகர்வோரால் இலகுவில் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய வர்த்தக அடையாள  அமைந்துள்ளதுடன், ஒன்றிணைக்கப்பட்ட உறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த குறியீட்டின் மாற்றத்துடன், நிறுவனம் முழுவதிலும் சேவை ஒன்றிணைப்பு மற்றும் மீளமைப்புப் பணிகள் போன்றன SLT இன் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. பணியில் அல்லது வாழ்க்கையில், அதிக வினைத்திறன், இலகுவாக்கம் மற்றும் வரையறைகளற்ற வாய்ப்புகளுடன் SLT Mobitel இனால் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும்.

சகல பொருளாதாரப் பிரிவுகளையும் சேர்ந்த சகல அளவிலான நிறுவனங்களுக்கும், ஏனைய தொலைத்தொடர்பாடல்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்கள் (ISPs)> அரச துறை நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பாவனையாளர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளையும் தொலைத்தொடர்பு வலையமைப்புகளையும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் மூலம், SLT-MOBITEL வழங்குகின்றது. இந்த நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில், optical fibre, ADSL2+, VDSL2, carrier-grade Wi-Fi மற்றும் நிலையான மற்றும் மொபைல் 4G LTE தொழில்நுட்பங்கள் போன்ற பரந்தளவு தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன. நவீன சர்வதேச சேவைகளை வழங்கும் வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச கடலடி கேபிள் வலையமைப்புகளையும் நிறுவனம் பயன்படுத்துவதுடன், தொலைத் தொடர்பாடல் துறையில் பிரதான சர்வதேச செயற்பாட்டாளர் எனும் நிலையை பேணியுள்ளது. 

தேசிய வலையமைப்புடன் mobile telephony, high-speed broadband, enterprise solutions, international services மற்றும் பரந்தளவு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் போன்றன அடங்கலாக மொபைல் தொலைத்தொடர்பாடல் சேவைகளை SLT-MOBITEL, மொபிடெல் ஊடாக வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X