2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ லங்கா வனிதாபிமான தேசிய போட்டி மாகாண மட்டத்தில் ஆரம்பமானது

J.A. George   / 2021 நவம்பர் 10 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது இலங்கைப் பெண்களை தேசிய மட்டத்தில் வலுவூட்டும் பயணத்தில், NDB வங்கி, சிரச நியூஸ்பெஸ்ட் உடன் இணைந்து மாகாண மட்ட விண்ணப்ப நடைமுறையை ஆரம்பித்துள்ளது.

சிரச நியூஸ் ஃபர்ஸ்டுடன் மற்றும் NDB வங்கி வழங்கும் ஸ்ரீ லங்கா வனிதாபிமான மாகாணப் போட்டியானது நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் பெண் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு எட்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டி இந்த ஆண்டு இரண்டு புதிய பிரிவுகளுடன் சேர்த்து 10 பிரிவுகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்முயற்சியாண்மை (சிறிய அளவிலான), தொழில்முயற்சியாண்மை (மைக்ரோ அளவிலான), தொழில்முயற்சியாண்மை (வரவிருக்கும்), இளம் தலைவர், சூழல் முகாமைத்துவம், விளையாட்டு, தன்னார்வ சேவைகள், கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் இலக்கியம் மற்றும் கல்விச் சேவைகள் ஆகியன இந்த வருடம் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

மாகாண போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு இணையாக, ஒவ்வொரு மாகாணத்திலும் மகளிர் தின விழா நடத்தப்படும். இந்த திட்டம், கொவிட் 19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கும் அதே வேளையில் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான மதிப்புமிக்க சந்தை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் போன்றவற்றை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்முயற்சியாளர்களுக்கு உதவுவதில் NDB எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது, குறிப்பாக பெண்கள் வாழ்வில் அதிக உயரங்களை அடையவும் பாரம்பரிய நியமங்கள் மற்றும் தடைகளை வெற்றிகரமாக கடக்கவும் உதவுகிறது.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏனைய துறைகளுக்கும் பெண்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்புகள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை. அந்தவகையில் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், மேலும் அதிகமான பெண்களை பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளில் முன்னிலையாகுவதை ஊக்குவிப்பதற்காகவும் NDB வங்கி தனது “அரலிய" வங்கி பெண்கள் முன்முயற்சியின் கீழ் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

வங்கியானது சிரச நியூஸ் ஃபர்ஸ்டுடன் இணைந்து அவர்களின் நிபுணத்துவம் வாய்ந்த துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் பங்களிப்பைக் கொண்டாடவும், வெகுமதி அளிக்கவும் மற்றும் அங்கீகரிக்கவும் எதிர்பர்க்கிறது. விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் NDB மற்றும் நியூஸ் ஃபர்ஸ்ட் இணையதளங்கள் மூலம் கிடைக்கின்றன. பொருத்தமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பெறுவதற்கு vb2021@ndbbank.com அல்லது info@vanithabimana.lk  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது 0777-600040 என்ற ஹாட்லைனுக்கு அழைக்கவும் ஃ வாட்ஸ்அப் செய்யவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் info@vanithabimana.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கா வனிதாபிமான நிகழ்ச்சியானது NDB அரலியவின் கீழ் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து NDB பெண் தொழில்முயற்சியாளர்களும் அரலிய வர்த்தகக் கடன்கள் (மூலதனச் செலவுகள், வேலை மூலதனம் மற்றும் அன்றாட செயற்பாட்டுச் செலவுகளுக்கு), அரலிய கடனட்டை, அரலிய நடைமுறைக் கணக்கு, அரலிய சேமிப்புக் கணக்கு, அரலிய டெபிட் அட்டை, பணி மூலதன வசதிகள் (**வங்கியின் நடைமுறையில் உள்ள கடன் அளவுகோல்களுக்கு உட்பட்டது), முன்னுரிமை வட்டி விகிதங்கள், காப்புறுதித் திட்டங்கள் (வாழ்க்கை காப்புறுதி மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் நன்மைகள்) மற்றும் நிதி அல்லாத சேவைகள் அரலிய குடையின் கீழ் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பெண் தொழில்முயற்சியாளர்களை அவர்களது முயற்சிகளில் மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 இந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அரலிய அறிவுப் பகிர்வு மன்றங்கள், அரலிய வழிகாட்டலல் மற்றும் வலைமையப்பு அமர்வுகள், மூன்றாம் தரப்பு ஆலோசனைச் சேவைகள் (உதாரணமாக, வணிகப் பதிவு செயல்முறை, புத்தகம் பேணுதல் போன்றவை) மற்றும் சிறு வணிக முகாமைத்துவம் குறித்த சிறப்புச் சான்றிதழ் திட்டமும் அணுகக் கூடியவையாக இருக்கும்.

NDB வங்கி Asiamoney சிறந்த வங்கி விருதுகளில் “2021 இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கி”க்கான விருதை வென்றது. இதற்கு மேலதிகமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற குளோபல் ஃபைனான்ஸ் இதழால் இந்த வங்கி 2021 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த வங்கி என முடிசூட்டப்பட்டது. அத்துடன் இங்கிலாந்தின் தி பேங்கர் இதழால்; இலங்கையின் ஆண்டின் வங்கியாக அங்கீகரிக்கப்பட்டது.  NDB வங்கி இலங்கையில் பட்டியலிடப்பட்ட 4 வது பெரிய வங்கியாகும். அத்துடன் NDB குழுமத்தின் தாய் நிறுவனமுமாகும். இலங்கையில் உள்ள ஒரே நிதிச் சேவை நிறுவனமான NDB குழுமம் இலங்கை மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதற்காக அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவைகளை தடையின்றி அணுகும் வகையில் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X