Freelancer / 2025 ஒக்டோபர் 31 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT‑MOBITEL, 39ஆவது வருடாந்த சர்வதேச ARC விருதுகள் வழங்கும் நிகழ்வில், மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் அடங்கலாக ஐந்து விருதுகளை சுவீகரித்துள்ளது. உலகின் மாபெரும் மற்றும் நன்மதிப்பைப் பெற்ற வருடாந்த நிதிஅறிக்கைகளை கௌரவிக்கும் நிகழ்வாக ARC விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SLT‑MOBITEL நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை, ‘வாழ்வும் இணையும் இடம்’ (Where Life Syncs) என்ற தலைப்பில், நிதித் தகவல்களுக்கு அப்பால் விரிந்த எல்லைகளை உள்ளடக்கி, அதன் முழுமையான செயல்பாட்டுக் கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த அறிக்கையானது, நிதி முடிவுகளை மட்டுமல்லாது, நிறுவனத்தின் நிலைத்தன்மை முயற்சிகள், திட்டமிட்ட முன்னெடுப்புகள், செயல்பாட்டுச் சிறப்பம்சங்கள் மற்றும் பங்குதாரர் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றையும் இணைத்துக் காட்டுகிறது. இதன் மூலம், தொழில்நுட்பத்தின் வாயிலாக மக்களையும், வணிகங்களையும், சமூகங்களையும் இணைக்கும் ஒரு நம்பகமான தேசிய வர்த்தக நாமமாக SLT-MOBITEL வகிக்கும் நிலையை இது உணர்த்துகிறது.
இந்த ஒன்றிணைந்த அணுகுமுறை, அதிக வெளிப்படைத்தன்மையையும் பதிலளிக்கும் பொறுப்பையும் வழங்கி, நிறுவனத்தின் நோக்கு, முன்னுரிமைகள் மற்றும் நீண்ட கால தாக்கத்தைப் பற்றி பங்குதாரர்களுக்கு ஒரு முழுமையான புரிதலை வழங்குகிறது. நிலைபேறாண்மை, புதுமை மற்றும் நிர்வாகம் போன்ற நிதி அல்லாத அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம், இந்த அறிக்கை நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, பொறுப்பான கூட்டாண்மை குடிமகன் தன்மையை நிரூபிப்பதுடன், SLT‑MOBITEL ஐ இத்துறையில் ஒரு எதிர்காலத்தை நோக்கிய முன்னோடியாக அமைந்திருக்கச் செய்துள்ளது.
விருதுகள் வழங்கும் நிகழ்வில், நடுவர் குழுவினரிடமிருந்து SLT-MOBITEL பாராட்டுதலைப் பெற்றதுடன், நிதி அறிக்கைக்கு 'எழுத்து வடிவத்திற்கான' தங்க விருதையும் வென்றது. இது, பாரம்பரிய அறிக்கையிடலுக்கு துணையாக நிதி-சார்ந்தல்லாத தகவல்களை இணைப்பதன் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. 'தொடலைத்தொடர்பு சேவைகள் வழங்குநர்' பிரிவில், நிறுவனத்தின் உள்ளக வடிவமைப்பு மற்றும் தகவல் வரைகலை ஆகியவற்றுக்காகவும் தங்க விருதுகள் கிடைத்தன. இது படைப்பு வெளியீட்டிலும், மூலோபாய தொடர்பாடலிலும் அதன் சிறப்பை வெளிப்படுத்தியிருந்தது.
கூடுதலாக, அட்டைப் படம்/வடிவமைப்பு மற்றும் விளக்கப் படங்கள் ஆகியவற்றுக்காக SLT-MOBITEL வெண்கல விருதைப் பெற்றது. இது காட்சிப்படுத்தல் கதைசொல்லல் மற்றும் வர்த்தக நாம வெளிப்படுத்தல் மீதான அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்கிறது. இந்த கௌரவிப்புகள், புதுமை, வடிவமைப்பு மற்றும் தாக்கத்திற்குரிய தகவல் வழங்கல் மூலம் தொழில்துறை தரங்களை உயர்த்துவதற்கான நிறுவனத்தின் உறுதியைக் காட்டுகிறது.
உலகின் மிகவும் பிரபல்யமான வருடாந்த நிதி அறிக்கைப் போட்டியில் கிடைத்த அங்கீகாரம், இலங்கையின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் SLT-MOBITEL இன் முன்னோடி நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விருதுகள் புத்தாக்கத் திறன்கள், வெளிப்படைத்தன்மை, பதிலளிக்கும் பொறுப்பு மற்றும் நம்பிக்கையையும் பெருமையையும் தூண்டும் விதத்தில் கதையைச் சொல்லும் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான ARC விருதுகளில், SLT-MOBITEL ஒரு தங்க விருதையும் (Gold) ஒரு கௌரவச் சான்றிதழையும் (Certificate of Honour) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .