2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிலைபேறான வளர்ச்சியை பதிவு

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரக்குக் கையாளல், ஓய்வு விருந்தோம்பல் மற்றும் முதலீடுகள் போன்ற துறைகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளதுடன், 34 நாடுகளின் 70 க்கும் அதிகமான நகரங்களில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ள எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2022 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உறுதியான தந்திரோபாய நிறைவேற்றம் மற்றும் அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்தல் போன்றவற்றினூடாக எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ரூ. 235.1 பில்லியனை (வருடாந்த உயர்வு +146%) வருமானமாகவும், தேறிய வட்டியாக ரூ. 36.9 பில்லியனையும் (வருடாந்த உயர்வு +156%) மற்றும் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 20.1 பில்லியனையும் (வருடாந்த உயர்வு +220%) பதிவு செய்துள்ளது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீஃவ் யூசுஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “எளிமையான சொத்துக்களைக் கொண்ட எமது வியாபார மாதிரி, சர்வதேச வலையமைப்பு, உறுதியான ஐந்தொகை மற்றும் வியாபாரத்தை ஒன்றிணைந்து அணுகுவது மற்றும் உறுதியான தலைமைத்துவம் போன்றன, சகல பங்காளர்களுக்கும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியை பிரத்தியேகமான பெறுமதிக் கூறாக அமையச் செய்துள்ளன.” என்றார்.

குழுமம் தொடர்ச்சியாக உறுதியான வருமதிகளைப் பதிவு செய்திருந்ததுடன், கடந்த பன்னிரண்டு மாதங்களில் (trailing twelve month) 96.16% எனும் பங்கு உரிமை மீதான  வருமானத்தை (ROE) பதிவு செய்து, குழுமத்தினால் பின்பற்றப்பட்டிருந்த வினைத்திறன் வாய்ந்த சொத்துகள் பயன்பாட்டு தந்திரோபாயங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு ஈடுபாடு போன்றவற்றில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கத்தின் காரணமாக அந்நியச் செலாவணி வருமதி ரூ. 6.9 பில்லியனை பதிவு செய்திருந்ததுடன், நிறுவனத்தின் தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 25 பில்லியனினால் அதிகரித்திருந்தது. இதனூடாக கடந்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் வியாபாரக் கோவை மற்றும் ஐந்தொகை போன்றன கட்டியெழுப்பப்பட்டுள்ளமைக்கான மேலதிக ஆதாரமாக இது அமைந்துள்ளது.

சரக்குக் கையாளல் துறையில் சர்வதேச சந்தைச் சூழல்கள் மற்றும் பாரம்பரியமான கேள்வி குறைவான போக்குகள் போன்றன நிலவிய போதிலும், தந்திரோபாயத்தில் கவனம் செலுத்துவதனூடாக, அதன் செயற்பாடுகளை வெளிப்படுத்த முடிந்திருந்ததுடன், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் துறையினால் தொடர்ச்சியான வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்தது. இந்தப் பிரிவின் வருமானம் ரூ.233 பில்லியனாகவும் (வருடாந்த உயர்வு +146%), தேறிய இலாபம் ரூ. 36.2 பில்லியனாகவும் (வருடாந்த உயர்வு +154%) மற்றும் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 18.8 பில்லியனாகவும் (வருடாந்த உயர்வு +183%) பதிவாகியிருந்தது.

பிரதான சந்தைகளில் குறைந்தளவு கேள்வி காணப்பட்டமையால், ஆகாய சரக்கு பொருட்கள் பிரிவு இந்த காலாண்டில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. மாறாக, கடல்மார்க்க சரக்கு கையாளல் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.  இந்தத் துறையின் மீது காண்பிக்கப்பட்டிருந்த அதிகளவு கவனத்தினூடாக இந்த உறுதியான வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. உறுதியான பங்காளர் வலையமைப்பு, அதிகரித்த வாடிக்கையாளர் ஊடுருவல், மேம்படுத்தப்பட்ட ஆற்றல்திறன் போன்றன, கடல்சார் சரக்குக் கையாளல் பிரிவுக்கு உறுதியான நிலையை பேண உதவியிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .