2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செலான் வங்கி PayHere உடன் கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஜூலை 30 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, இலங்கையின் அதிகளவு வரவேற்பைப் பெற்ற கொடுப்பனவு கட்டமைப்பு சேவையான PayHere உடன் கைகோர்த்து, இலங்கையின் சிறிய வியாபாரங்களுக்கு ஒன்லைன் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வலுவூட்ட முன்வந்துள்ளது. இந்த மூலோபாய பங்காண்மையினூடாக, புதிய விற்பனை நிலையங்களுக்கு PayHere ஐ எந்தவொரு உள்நாட்டு வங்கிக் கணக்குடனும் இணைத்துக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக செலான் வங்கி திகழ்வதுடன், தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு பரந்தளவு தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றது. PayHere என்பது நிதித்தொழில்நுட்ப தீர்வுகள் (Fin-tech) சேவை வழங்குநராக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களிடமிருந்து வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒன்லைனில் கொடுப்பனவுகளை பல்வேறு கொடுப்பனவு முறைகளில் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது. செலான் வங்கியுடனான இந்த தந்திரோபாய பங்காண்மையினூடாக, PayHere இன் விற்பனையாளர்களுக்கு காணப்பட்ட குறிப்பிட்ட வங்கிக் கணக்கொன்றை கொண்டிருக்க வேண்டிய நெருக்கடி நிலை நீக்கப்பட்டுள்ளதுடன், PayHere ஊடாக தமது வியாபார வங்கிக் கணக்கினை பயன்படுத்தி ஒன்லைன் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது.

PayHere விற்பனையாளர் இருப்பை வளர்ச்சியடையச் செய்வதற்கு செலான் வங்கி பங்களிப்பு வழங்குகின்றது. இதுவரையில் 300க்கும் அதிகமான விற்பனையாளர்கள் மத்தியில் வியாபிக்கச் செய்துள்ளது. செலான் வங்கியுடனான இந்த பங்காண்மையினூடாக, ஒவ்வொரு வியாபாரங்களுக்கும் டிஜிட்டல் மயமான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளச் செய்யும் PayHere இன் நோக்கத்தை நிறைவேற்ற வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

PayHere இன் ஒன்லைன் விண்ணப்ப செயன்முறையினூடாக புதிய வியாபாரங்களுக்கு இணைந்து கொள்ள முடியும் என்பதுடன், பல சேவை வழங்குநர்களிடமிருந்து தனித் தனியான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக, ஒரே சேவை வழங்குநரிடமிருந்து சகல சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட கொடுப்பனவு முறையாக PayHere வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், விற்பனையாளர் கையகப்படுத்தல் முறை மற்றும் செலான் வங்கியுடனான மூலோபாய பங்காண்மை என்பன வங்கியின் வலுவூட்டலுடனான பாதுகாப்பு நியமங்களை குறிப்பதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X