2024 மார்ச் 28, வியாழக்கிழமை

செலான் வங்கியின் டேட்டா நிலையம்

S.Sekar   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, நவீன வசதிகள் படைத்த டேட்டா நிலையத்தை, கொழும்பில் அமைந்துள்ள செலான் டவர்ஸ், இல. 90, காலி வீதி, கொழும்பு 03 முகவரியிள்ள தனது பிரதான அலுவலகத்தில் நிறுவியுள்ளது.

இந்த நவீன அம்சங்கள் கொண்ட நிலையம் TIA-942 சான்றளிக்கப்பட்ட டேட்டா நிலைய வடிவமைப்பு ஆலோசகர் தரிந்து மீபேகமவினால் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், V S Information Systems இனால் முன்னணி தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு சேவை வழங்குநர்களான Panduit, Vertiv மற்றும் Starline ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டிருந்தது. புதிய டேட்டா நிலையத்தில் வங்கியின் பிரதான அப்ளிகேஷன் சேர்வர்கள், களஞ்சியப்படுத்தல் பகுதிகள், வலையமைப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் இணைப்பு உட்கட்டமைப்பு போன்றன அடங்கியிருக்கும். செலான் வங்கிக்கு அதன் செயற்பாட்டு செலவுகளை குறைத்துக் கொள்வதற்கு இது உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், பாதுகாப்பை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு உயர் அப்ளிகேஷன்கள் கிடைப்பதை உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.

செலான் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி ஹர்ஷ வணிகதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “வினைத்திறன் வாய்ந்த நிர்வாகம், உயர் கிடைப்பனவு, பாதுகாப்பு மற்றும் செலவுக் குறைப்பு ஆகியவற்றை சிறந்த வகையில் நிர்வகிப்பதற்கு எமது டேட்டா நிலைய உட்கட்டமைப்பு செயற்பாடுகளை மையப்படுத்திக் கொள்வதற்கான தேவையாக இது அமைந்திருந்தது. நவீன வசதிகள் படைத்த டேட்டா நிலையத்தில் முதலீடு செய்வதற்கான எமது நகர்வு என்பது, இலங்கையில் செலான் வங்கி மேற்கொள்ளும் மற்றுமொரு முதன் முதலான செயற்பாடாக அமைந்திருப்பதுடன், உயர் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை அணுகுவதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

வங்கியின் தகவல் தொழில்நுட்ப அணி, விசேட நிபுணருடன் இணைந்து, சந்தையில் காணப்படும் தீர்வுகள் தொடர்பான பரிபூரண மதிப்பாய்வுகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொண்டிருந்தனர். ஆழமான மதிப்பாய்வைத் தொடர்ந்து, V S Information Systems இனால் Panduit Data Center infrastructure ஐக் கொண்டு வழங்கப்படும் தீர்வை தனது டேட்டா சென்ரர் செயற்பாடுகளுக்காக செலான் வங்கி தெரிவு செய்திருந்தது.

புதிய Rated (tier) 3 உள்ளம்சத்தைக் கொண்ட டேட்டா நிலையம், இலங்கையில் இவ்வாறான வசதிகளுடன் அமைந்துள்ள முதல் நிலையமாக திகழ்கின்றது. அத்துடன் மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டு வினைத்திறனை வழங்கி, சிறந்த பாதுகாப்பு, வலு, குளிர வைப்பு, வலையமைப்பு இணைப்பு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகம் ஆகியவற்றை வழங்கும். கிடைக்கும் கட்டமைப்புகளுக்கான உயர் உறுதிப்பாட்டை வழங்கும் என்பதுடன், சேவை மட்ட உறுதிப்பாட்டையும் வழங்கும். மேலும், டேட்டா நிலையத்தினால் கண்டிப்பான தணிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை நிறைவேற்றவும், எதிர்கால மேம்படுத்தல்களுக்காக அளவீடுகளையும் வழங்கும்.

ஹர்ஷ மேலும் தெரிவிக்கையில், “தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் என்பவற்றில் எமது தொடர்ச்சியான கவனம் என்பதனூடாக, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பல சவால்களை வெற்றிகரமாக கடந்து வர முடிந்தது. எமது டேட்டா நிலையத்தின் அடித்தளம் என்பது, டிஜிட்டல் வங்கிச் சேவைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வகையில், பாதுகாப்பாகவும், வலுச் சிக்கனமான தீர்வுகளினூடாக பெற்றுக் கொடுப்பதாகும். அவற்றுடன், சிறந்த வாடிக்கையாளர் உதவிச் சேவைகளையும் இணைத்து வழங்குவதும் இலக்காகும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X