2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் 2020 ஆம் ஆண்டின் மெய்நிகர் விருதுகள் வழங்கும் நிகழ்வு

J.A. George   / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, தனது வருடாந்த விருதுகள்  வழங்கும் நிகழ்வை 2021 ஒக்டோபர் 9 ஆம் திகதி மெய்நிகர் நிகழ்வாக கொண்டாடியது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் மெய்நிகர் நிகழ்வாக கொண்டாடப்பட்ட இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, முகவர், பாங்கசூரன்ஸ் மற்றும் கூட்டாண்மை விற்பனை செயலணி ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

3000 க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திரா, நிதிச் சேவைகள் பிரிவின் தலைவர் சுரேஷ் ராஜேந்திரா மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2020 ஆம் ஆண்டில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த நிறுவனத்தின் ஆலோசகர்கள், காப்புறுதி உறவு பேண் அதிகாரிகள், அணித் தலைவர்கள், நாடளாவிய ரீதியிலான பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்கள், கூட்டாண்மை மற்றும் பாங்கசூரன்ஸ் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் என 700 க்கும் அதிகமானோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தமட்டில் சவால்கள் நிறைந்த வருடமாக அமைந்திருந்தது. நாட்டில் தொற்றுப் பரவலின் தாக்கம் மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், அணியினால் சிறந்த பெறுபேறுகளை எய்த முடிந்தது.

யூனியன் அஷ்யூரன்சுக்கும் சாதனை மிகுந்த பெறுபேறுகளை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. இன்று, இலங்கையில் காணப்படும் வழமையான புதிய வியாபார தவணைக் கட்டணங்கள் பிரிவில் சிறந்த ஐந்து செயற்பாட்டாளர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனமாக நாம் திகழ்கின்றோம். நிறுவனம் 13 பில்லியன் GWP பெறுமதியைக் கடந்திருந்தது. 172 MDRT தகைமையாளர்களையும் பதிவு செய்திருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் வரலாற்றில் இது மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.

மேலும், நிறுவனத்தின் பாங்கசூரன்ஸ் விநியோக பிரிவு கடந்த காலங்களில் வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கையின் முதல் தர சேவை வழங்குநராக திகழ்கின்றது. யூனியன் அஷ்யூரன்ஸில் காணப்படும் சிறந்த குழுநிலை செயற்பாட்டின் பயனாக எம்மால் இந்த சிறந்த சாதனைகளை எய்த முடிந்துள்ளது. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, சகல அணி அங்கத்தவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

2020 ஆம் ஆண்டில், யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமைக்குரிய 24 விருதுகளை சுவீகரித்திருந்தது. இதனூடாக ஆண்டின் அதிகளவு விருதுகளை வென்ற ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக LMD இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, ஆண்டின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம், ஆண்டின் சிறந்த வாடிக்கையாளர் சேவை காப்புறுதி வழங்குநர் மற்றும் புத்தாக்கமான டிஜிட்டல் காப்புறுதி சேவை வழங்குநர் ஆகிய விருதுகளையும் பெற்றிருந்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில், நிறுவனம் நவீன, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, டிஜிட்டல் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக தன்னை மாற்றியமைத்திருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால்களுக்கு மத்தியிலும், யூனியன் அஷ்யூரன்ஸினால் டிஜிட்டல் மயமாக்கல் எனும் சக்தியைக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற டிஜிட்டல் தீர்வுகளையும் சௌகரியமான டிஜிட்டல் சேவைகளையும் வழங்கியிருந்தது. புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வழிமுறை என்பது அதன் கடுமையான செயற்பாட்டு மாதிரியைப் பின்பற்றி கொண்டமைந்திருந்ததுடன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்படுத்தல், கொடுக்கல் வாங்கல்களை மேம்படுத்தல் மற்றும் 100% டிஜிட்டல் கட்டமைப்புக்கு பயிற்சியளித்தல் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் போன்றன அடங்கியிருந்தன.

இந்த மெய்நிகர் நிகழ்வை விறுவிறுப்பானதாக அமைந்திருக்கச் செய்யும் வகையில், சிறப்பு திறமை வெளிப்படுத்தல்களாக யொஹானி மற்றும் சதீசனின் இசைக் கச்சேரி இடம்பெற்றதுடன், நிகழ்வை நிரஞ்ஜனி சண்முகராஜா, சாரங்க திசாசேகர மற்றும் ஸ்டெஃபனி சிறிவர்தன ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் வழங்கல் 2020 நிகழ்வு, சாதனையாளர்களை கௌரவித்து, இலங்கையர்களின் கனவுக்கு வலுச் சேர்க்கும் பயணத்தில் மேலும் பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் நிறைவடைந்திருந்தது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது.

ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது.

76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .