2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் GPTW விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பு

S.Sekar   / 2021 நவம்பர் 29 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான ஒன்பதாவது வருடமாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், 2021 ஆம் ஆண்டில் ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அண்மையில் இடம்பெற்ற GPTW விருதுகள் வழங்கும் நிகழ்வில் பாரிய நிறுவனங்கள் பிரிவில் வெண்கல விருதை வெற்றியீட்டியிருந்தமை புதிய அங்கமாக அமைந்துள்ளது. அதனூடாக இந்தப் பிரிவில் முதல் மூன்று ஸ்தானங்களுக்குள் தெரிவாகிய இலங்கையின் ஒரே காப்புறுதி நிறுவனம் எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த கௌரவிப்பு தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் தெரிவிக்கையில், “தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல் ஊழியர் ஈடுபாடு என்பது சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்திருந்தது. குறிப்பாக, நாம் எமது இருப்பிடங்களிலிருந்து பணியாற்றியிருந்தோம். ஊழியர்கள் பாதுகாப்பாக உணரும் சூழலையும், அவர்களின் தொழில்களில் வளர்ச்சியை பதிவு செய்யக்கூடிய வகையிலும், எமது வாடிக்கையாளர்களுக்கு தினசரி மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நாம் பிரதானமாக முன்னெடுத்திருந்த நடவடிக்கைகளில், ஊழியர்களுக்கு இலவசமாக உளவியல் ஆரோக்கியத்தை பேணும் வகையிலான ஆதரவை இரகசியத்தன்மை வாய்ந்த வகையில் தகைமை வாய்ந்த நிபுணர்களினூடாக பெற்றுக் கொடுத்திருந்தோம். கொவிட் பரிசோதனை, ஆலோசனை மற்றும் வைத்தியசாலை அனுமதி தொடர்பான விசேட சேவைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். எதிர்பாராத சூழ்நிலைகளில், எதிர்பாராத தீர்வுகளைப் பெற வேண்டிய தேவைகள் எழும். இந்த அழுத்தம் நிறைந்த காலப்பகுதியில் எமது அணி அங்கத்தவர்களுக்கு உதவுவதற்கு நாம் அந்த மேலதிக தூரத்தை பயணித்திருந்தோம். பாரிய நிறுவனங்கள் வரிசையில் கௌரவிக்கப்பட்டிருந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இந்த கௌரவிப்பு சேரும்.” என்றார்.

நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு உறுதியான ஊழியர் பெறுமதி ஒதுக்கீடுகள் மற்றும் எப்போதும் ஈடுபாட்டுடனான புத்தாக்கமான ஊக்குவிப்புடனான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. தொழில்நிலை மேம்படுத்தல் என்பது பிரதான பெறுமதி வழிகாட்டியாக அமைந்திருப்பதுடன், STEP (Striving To Excellence Programme) எனும் புத்தாக்கமான திட்டத்தினூடாக, சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிர்கால தலைமைத்துவ பணிகளில் சிறப்பாக செயலாற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதில் கூட்டாண்மை நிர்வாகத்துடன் தொடர்புகளைப் பேணுவது, நேரடி வியாபாரத் திட்டங்களில் பங்கேற்பது மற்றும் முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்புகள் போன்றன அடங்குகின்றன.

ஓரிடத்திலிருந்து பணியாற்றுவதற்கு மேலதிகமாக, அணியினரை ஊக்கத்துடனும், ஈடுபாட்டுடனும் பேணுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. பணிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கிடையேயும் சமநிலையை பேணுவதற்கான நடவடிக்கைகள், காலாண்டு தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான டிஜிட்டல் டவுன்ஹோல் சந்திப்புகள், குழுநிலை செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கான happy hour அமர்வுகள் போன்றனவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள், புத்தாக்கம் மற்றும் பயிலல் போன்றன நிறுவனத்தின் கலாசாரத்தில் பிரதான அம்சங்களாக அமைந்திருப்பதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது நோக்கம், தன்னேற்புத் திட்டம் மற்றும் பெறுமதிகள் போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்தி, அதன் மக்களுக்கு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தி, பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாகத் திகழ்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .