2025 ஜூலை 19, சனிக்கிழமை

கண்டாவளையில் 1000இற்கும் மேற்பட்ட காணிப் பிணக்குகள்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவினுள் 1000இற்கும் மேற்பட்ட காணிப் பிணக்குகள் இருப்பதாக பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

கண்டாவளைப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

'கண்டாவளைப் பிரதேசத்தில் பெரும்பாலான காணிகள் மத்திய வகுப்புத் திட்டத்திலே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வழங்கப்பட்ட காணிகள் தொடர்பிலான பிணக்குகள் 1000இற்கும் மேற்பட்டவை தீர்;க்கப்படாமல் இருக்கின்றன.

அத்துடன், கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் 950 குடும்பங்களுக்கு காணிகள் தேவையாகவுள்ளன. ஆனால், பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளாக உமையாள்புரம், கொழுந்தில்புலவு ஆகிய பகுதிகளில் தலா 50 ஏக்கர் காணிகள் வீதம் 100 ஏக்கர் காணிகள் இருக்கின்றன.

இந்தக் காணிகளை வைத்து காணியில்லாதவர்களுக்கு காணிகள் வழங்க முடியாது. ஆகவே கண்டாவளையினைச் சேர்த்து, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வறுமைக்கோட்டின் கீழுள்ள காணியில்லாத குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X