2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாகதம்பிரான் ஆலயத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது

Kanagaraj   / 2014 மே 16 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை மாங்குளம் விசேட அதிரடிப்படை முகாமைச்சேர்ந்த படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், குளியாப்பிட்டிய,கொச்சிக்கடை,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மற்றும் மாங்குளம் போன்ற பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிகளிடமிருந்து கெப் ரக வாகனம், மண்வெட்டி,பிக்காஸ்-2, அலவாங்கு, பித்தளை வலை மற்றும் பூஜைக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X