2025 ஜூலை 19, சனிக்கிழமை

மன்னாரில் 114 குடும்பங்களுக்கு இலவச குடிநீர்த் திட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஏற்பாட்டில் மன்னாரில் 114 தமிழ், முஸ்ஸிம் குடும்பங்களுக்கு இலவச குடிநீர்த் திட்டம் வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட 114 குடும்பத் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பு ஒன்று மன்னார், உப்புக்குளம் பிரதான வீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் மன்னார் நகர சபையின் உறுப்பினர் என்.எம்.நகுசின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட மன்னார் உப்புக்குளம் வடக்கு, உப்புக்குளம் தெற்கு, பள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 114 குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கைத்தொழில் வாணிப அமைச்சின் வடமாகாண உதவிப் பணிப்பாளர் முஜீபுல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயனாளிகளின் தெரிவுகள் தொடர்பிலும், குடிநீர் இணைப்புக்கள் வழங்குவது தொடர்பிலும் பயனாளிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X