2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 17 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 17 பேரையும் எதிர்வரும்  04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான மீனவரை விசேடமாக பராமரிக்குமாறும் இம்மீனவர்களின் வலை மற்றும் படகுகளை பாதுகாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

03 படகுகளில் வந்த  இம்மீனவர்களை சனிக்கிழமை (28)  இரவு கைதுசெய்த கடற்படையினர், தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர்  மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் இம்மீனவர்களை ஒப்படைத்த நிலையில்,  இவர்கள் தலைமன்னார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மீனவர் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X