2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் வாழும் 22 குடும்பங்களுக்கு காலக்கெடு

Kanagaraj   / 2014 மே 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் ஸ்டேசன்  பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 22 குடும்பங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்விடத்தில், இவ்விடம் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என்றும் புகையிரத நிலைய நிர்வாகத்தினால் அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் புகையிரத காணியில் அனுமதியில்லாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றிக்கொள்ளுதல் எனும் தலைப்பில் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவ்விடத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என கருதப்படும் குறித்த பகுதியில் சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் உள்ளது. குறித்த பகுதியில் உள்ள 22 வீடுகளில் பல வீடுகள் நிரந்தரமான வீடுகள், தற்காலிக கொட்டில்கள் சிலவற்றிலும் மக்கள் வாழ்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களினால் ஏற்கெனவே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புகையிரத தலைமையகத்தினால் தலைமன்னார் ஸ்டேசன் கிராம அலுவலகர் ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த 22 பேருக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக மக்கள் வாழ்ந்து வருகின்ற குறித்த காணியிலிருந்து எங்களை எழும்பிச் செல்லுமாறு கூறினால் நாங்கள் எங்கு செல்வது என அந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X