2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதூர் நாகதம்பிரான் பொங்கல் ஜூன் 23இல்

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, புதூர் நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதி சிறப்பாக நடைபெறவுள்ளதாக  ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அன்றையதினம் காலையிலிருந்து விசேட பூஜைகள்  நடைபெறவுள்ளதுடன், இரவு பொங்கல் நடைபெறவுள்ளது.

இதேவேளை, கோவில் பற்றுச்சீட்டுக்கள் கோவில் முன்றலில் விற்பனை செய்யப்படும் என்பதால், எவராவது கோவில்  பெயரை பயன்படுத்தி பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பில் பொதுமக்களை  அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கோவில் நிர்வாகம்,  இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X