2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

குளவிக்கொட்டுக்குள்ளான 24 பேருக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 19 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்,நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த 18 மாணவர்களும் 06 ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்குள்ளாகியதாக  அப்பாடசாலை அதிபர் தெரிவித்தார். 

இவர்களில் 04 மாணவர்கள் தொடர்ந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், ஏனையோர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு  திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை வளாகத்திலிருந்த குளவிக்கூடொன்றை இனந்தெரியாத நபர்கள் கலைத்தமையாலேயே  புதன்கிழமை (18) காலை இவர்களை குளவிகள் சூழ்ந்து கொட்டியதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X