2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 323 பேருக்கு வீடமைப்புக் கடன்கள்

Super User   / 2014 ஜூன் 23 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 323 பேருக்கு வீடமைப்புக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டப் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 'ஜனசெவன' உபகார கடன் திட்டம் மற்றும் 'சசுனின் சேவன' மானியத்திட்டம் ஆகியவற்றின் மூலம், 2011 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலுமே இந்த எண்ணிக்கையிலான வீடமைப்புக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற இந்த வீடமைப்புக் கடனானது பல்வேறுபட்ட தொகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது, வீடுகள் திருத்துவதற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலும், வீடுகள் அமைப்பதற்கு 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலும் வழங்கப்படுகின்றது.

குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் இந்தக் கடன்களானது, தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு பகுதி மானியமாக வழங்கப்படுகின்றது. 

அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 166 பேருக்கும், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் 57 பேருக்கும், பூநகரி செயலர் பிரிவில் 55 பேருக்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 45 பேருக்குமாக 323 பேருக்கு வீட்டுத்திட்டக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X