2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 6 கிராமிய நீர்வழங்கல் திட்டங்கள்

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பரந்தன் மற்றும் கிளிநொச்சி நகர் டிப்போச் சந்தி ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் நாட்டின் 1620 மில்லியன் ரூபா நிதியுதவியில் இரண்டு தண்ணீர்த் தாங்கிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்த் தட்டுப்பாட்டினை நீக்கும் பொருட்டு 6 கிராமிய நீர்வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாகவே மேற்படி பிரதேசங்களில் நீர்த்தாங்கிகள் அமைக்கப்படுகின்றன.

அக்கராயன், ஆனையிறவு, கல்லாறு, வட்;டக்கச்சி ஆகிய 4 இடங்களிளும் இந்த கிராமிய நீர்வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், ஆனைவிழுந்தான், கல்லாறு குடிநீர் விநியோகத்திட்டங்;கள் தொடர்பான அறிக்கைகள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து அதற்கான நிதிகள் கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், அக்கராயன் மற்றும் வட்டக்கச்சி ஆகிய கிராமிய நீர்வழங்கல் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X