2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நானாட்டான் விவகாரம்;65 பேர் கைது:18 பேருக்கு விளக்கமறியலில்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகம்  மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும்  பொன் தீவு கிராமத்தைச் சேர்ந்த 65 சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில்; 18 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று புதன் கிழமை உத்தரவிட்டார்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை நானாட்டான் பிரதேசச் செயலகம் மீது பொன் தீவு கண்டல் கிராம மக்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது நானாட்டான் பிரதேசச் செயலகம் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து பொன் தீவு கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65 பேரை முருங்கன் பொலிஸார் விசாரனைக்காக அழைத்தனர்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட 65 பேரும் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பின் அவர்கள் அனைவரும் இன்று புதன் கிழமை மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் அஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த 65 பேரில் 18 பேரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு ஏனைய 47 பேரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன் குறித்த 47 பேரையும் மீண்டும் எதிர் வரும் 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

எனினும், நீதிமன்ற செயற்பாடுகள் தாமதமாக முடிவடைந்தமையினால் அவர்களை உறவினர்கள் பிணையில் அழைத்துச் செல்ல முடியாததினால்  அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த 65 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X