2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு வாரத்தில் 76 இலட்சம் ரூபா சேமிப்பு

Kogilavani   / 2014 மே 20 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பயனாளிகளிடம் நடத்தப்பட்ட புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் 76 இலட்சம் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் எம்.எம்.இர்பான் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடத்தப்பட்ட சேமிப்பு நிகழ்வுகளிலேயே இந்த சேமிப்புக்கள் சேமிக்கப்பட்டு அவை சமுர்த்தி வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

இந்த சேமிப்புக்களின் நிதிமூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கு மிகவும் குறைந்த வட்டி வீதங்களான 8 வீதம், 10 வீதம் என்ற வகையில் சுயதொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமுர்த்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் ஆர்வத்துடன் சேமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் சமுர்த்தி வங்கிகள் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு அவை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.  
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 95 கிராமஅலுவலர் பிரிவுகளிலும் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கு முழுப்பயன்களும் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X