2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

150 பேருக்கு உலர் உணவுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


வன்னிப் பகுதியில் பார்வையற்ற  150 பேருக்கு தலா 3,500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை (27) வழங்கப்பட்டன.

வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில், புலம்பெயர்ந்து  சுவிஸ் நாட்டில் இயங்கிவரும் எழுகை அமைப்பின் நிதியுதவியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள வன்னி பார்வையற்றோர் சங்கத்தில் இதன்  தலைவர் எஸ்.ரூபராஜ் தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்;டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; சீ.யோகேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உலர் உணவு பொருட்களை பயனாளிகளிடம் கையளித்தார்.

மேற்படி உலர் உணவுப் பொருட்கள் மாதாந்தம் சுழற்சி முறையில் பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.


 



  Comments - 0

  • raja Saturday, 28 June 2014 05:57 PM

    இதில் யாரய்யா கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X