2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மகிழங்குளத்தில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று(25) மாலை மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை பாடசாலை விட்டு வீடு செல்லும் போது தனது சக நண்பர்களுடன் புதிதாக வெட்டப்பட்ட கிணறொன்றில் நீரை பெற முற்பட்ட நிலையில் 9 வயதுடைய ஜெயச்சந்திரன் டிலோஜன் என்ற மாணவன் கிணற்றில் வீழ்ந்துள்ளான்.

இதனையடுத்து மற்றைய சிறுவர்கள் தமது வீட்டிற்கு சென்று தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிலர் கிணற்றில் வீழ்ந்து கிடந்த சிறுவனை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X