2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் மக்களிடம் செல்கின்றனர்: சத்தியலிங்கம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தற்போது அரசியல்வாதிகள் பலர் தேர்தல் காலத்தில் வாக்குகளைக் கேட்பதற்காக மாத்திரம்  மக்களிடம் செல்கின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் மக்களை அவர்கள் சந்திக்காதுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் ஆசிக்குளத்தில் புதிய உப தபாலகத்தை சனி;க்கிழமை  (26) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நடந்துமுடிந்த மாகாணசபைத் தேர்தலுக்கு வாக்குகளைக் கேட்பதற்காக வீடு, வீடாக  மக்களிடம் சென்றபோது, பலர் என்னிடம் கூறியது என்னவென்றால் தேர்தல் முடிந்தவுடன் எங்களை மறந்துவிடுவீர்கள் என்பதே.
இது அவர்களின் கடந்தகால அனுபவமாக இருக்கலாம்.

இந்நிலையில், தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தபோது, ஆசிக்குளம் மக்களால் இப்பகுதியில் உபதபாலகமொன்று  வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் உடனடியாக அஞ்சல் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்கவிடம் கோரிக்கை விடுத்தபோது, இதற்;கான அனுமதி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வடமாகாண பிரதி அஞ்;சல் மா அதிபரின் நடவடிக்கையால் இந்த உபதபாலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அஞ்சல் சேவைகள் அமைச்சருக்கு இப்பிரதேச மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று எமது இனம் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 30 வருடகால யுத்தம் பல வழிகளிலும் எம்மை பாதித்துள்ளன. இந்நிலையில்,  இவர்களுக்கான உடனடி தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டிய கடப்பாடு இம்மாகாணசபைக்குள்ளது.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிய வேலைத்திட்டங்கள் எமது மூத்த அனுபவமிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது' என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் என்.ரட்ணசிங்கம், வவுனியா பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் திருமதி எம்.ஜி.எல்காடோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X