2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பூநகரி வைத்தியசாலை விரைவில் திறக்கப்படும்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பூநகரி வைத்தியசாலை வளாகத்திற்கு மண் இட்டு நிரப்பியவுடன் இவ்வைத்தியசாலை திறந்து வைக்கப்படுமென  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

பூநகரி வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இருப்பினும், இவ்வைத்தியசாலை  திறந்துவைக்கப்படாமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இவ்வைத்தியசாலை வளாகம் ஆழமான பகுதியாகக் காணப்படுதால், அதற்கு மண் இட்டு நிரப்ப வேண்டியுள்ளது. இதற்கு 03 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகிறது.

இப்பணி நிறைவுற்றதும் இவ்வைத்தியசாலை விரைவில் திறந்து வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இவ்வைத்தியசாலைக்கான புதிய கட்டிடம் பூநகரி கணவாய்ப்பள்ளம் பகுதியில் 105 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

பூநகரி பிரதேச வைத்தியசாலை கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து பூநகரி வாடியடியிலுள்ள தனியார் ஒருவரின் வீட்டில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X