2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட  பாற்பொருட்கள் உற்பத்தி நிலையத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (29) திறந்துவைத்தார்.

ஐ.ஓ.எம் எனப்படும் இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. 
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமித்து அதைப்  பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றை தயாரிப்பதற்கு இப்பாற்பொருள் உற்பத்தி நிலையம் உதவியாகவிருக்கும் என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

கரைச்சிப் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ச.சந்திரசேகரத்தின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசிகரன், ஐ.ஓ.எம். நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி வ.வரதாபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X