2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு புதிய கட்டடம்

Suganthini Ratnam   / 2014 மே 02 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டட நிர்மாணத்திற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு அன்பளிப்பாக ஒதுக்கப்பட்ட இத்தொகையில் 25 மில்லியன் ரூபா உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

மேற்படி 25 மில்லியன் நிதியுதவியில் ஜூன் மாதமளவில் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மேலும், மாவட்டச் செயலக வளாகத்தில் ஏற்கெனவே அதி நவீன வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தொகுதி தொடர்பான திட்டவரைபு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X