2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறுவனை தாக்கிய சிறிய தந்தைக்கு விளக்கமறியலில்

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் வங்காலையில் 9 வயது சிறுவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும்  சிறிய தந்தையை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சனிக்கிழமை(03) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தாயின், இரண்டாவது கணவரான சிறிய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை குறித்த சிறுவனை அவருடைய சிறிய தந்தையார் கயிற்றினால் தாக்கியுள்ளார். இதன் போது கண் பகுதியில் காயமடைந்த குறித்த சிறுவன் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வைத்தியர்கள் சிறுவனிடன் கேட்டபோது, குறித்த சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையிலே சிறிய தந்தையை மன்னார் பொலிஸார் வெள்ளிக்கிழமை (02) கைது செய்தனர்.

விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (03) காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த நபரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X