2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீதி பெயர்ப்பலகையில் விளம்பரங்கள் ஒட்டப்படுவதால் மக்கள் அசௌகரியம்

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள வீதி பெயர்ப்பலகையில் விளம்பரங்கள் ஒட்டப்படுவதால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர்ப்பகுதியில் உள்ள வீதியின் பெயர்களை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கோடு நகரசபை அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் பல பெயர்ப்பலகையை அமைத்திருந்தன.

இப் பெயர்ப் பலகையில் அண்மைக்காலமாக தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் தமது விளம்பரங்களை ஒட்டி வருவதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை நகரசபையின் அனுமதி பெற்று வீதி பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டபோதிலும் அதில் விளம்பரங்களை ஒட்டுவோர் மீது நகரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X