2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மதவாச்சி பொலிஸுக்கு எதிராக மரத்திலேறி சத்தியாக்கிரகம்

Kanagaraj   / 2014 மே 04 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரொமேஷ் மதுசங்க

மதவாச்சி பொலிஸார் தன்னை சட்டவிரோதமான முறையில் கைது செய்ததாக கூறியும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதவாச்சி பஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மரத்திலேறி ஒருவர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

39 வயதான ரஞ்சித் சிறிவர்தன என்பவரே இந்த சத்தியக்கிரகப் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளார். மதவாச்சி பொலிஸாரினால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்ட தான், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அக்காலப்பகுதியில் பொலிஸார் தன்னை தாக்கியதாகவும் தன்னுடைய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கையில், சத்தியக்கிரத்தில் ஈடுபட்டுள்ள நபருக்கு எதிராக மூன்று முறைப்பாடுகள் பொலிஸில் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X