2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியாவில் தொடர்ச்சியாக மழை; தாழ்நிலப் பிரதேசங்கள் பாதிப்பு

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தாழ் நிலப்பிரதேசங்கள் பதிப்பை எதிர்கொண்டுள்ளன.

கடந்த சில நாட்களாக மாலைவேளையில் பெய்து வந்த மழை நேற்று மதியத்தில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வந்ததனால் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படுவதனால் மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் கொட்டகை வீடுகளில் உள்ளவர்கள் தொடர்ச்சியான மழையினால் பாதிப்புகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை சிறிய குளங்கள் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் மேவிப்பாயும் நிலையையும் எதிர்நோக்கியுள்ளது.

அத்துடன் மழையினால் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடி சேவையை மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X