2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட செயலகம்

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட செயலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சிக்கு நேற்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், மேற்படி கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

ஏ9 வீதிக்கு அண்மையாக நவீன வசதி வாய்ப்புக்களுடன் கூடியதாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மாவட்ட செயலகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

தற்போதுள்ள மாவட்ட செயலகம் பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடனும் வசதியீனங்களுடனும் இயங்கி வரும் நிலையில் இதன் பௌதீக வளங்களை விஸ்தரித்து நவீன வசதிகளைக் கொண்டமைந்ததாக புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X