2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விதை வங்கி திறப்பு

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபிலநாத்


வவுனியா செட்டிகுளத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் விவசாய திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் இலங்கையின் முதலாவது விதை வங்கி சனிக்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டது.

'உலர் வலய விவசாய மீட்சியை மேம்படுத்தும் திட்டம்' எனும் கருப்பொருளில் இச் சமுதாய விதை வங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சேதனப்பசளைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற விதைகளை சேமித்து வைத்து மக்களின் தேவைக்கு ஏற்ற வகையில் விநியோகிக்கும் முறைமையிலேயே இலங்கையின் முதலாவது விதை வங்கியாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ந. கமலதாஸ், பிரிகேடியர் ராஜ் ரணவக்க உட்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X