2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மன்னாரில் விழிர்ப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


உலக செஞ்சிலுவை தினம் மே மாதம் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை(4) காலை மன்னாரில் இடம்பெற்றது.

'இளைஞர் சக்தியை வலுவூட்டி சமூகத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தி நீடித்து நிலைத்திருக்கும் சமூக அபிவிருத்தியை நிலை நாட்டுதல்' எனும் கருப்பொருளில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையில் குறித்த ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,புத்தளம், அனுராதபுரம் ஆகிய 7 மாவட்டஙகளைச் சோந்த இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தொண்டர்கள் பணியாளர்கள் என சுமார் 500 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதன் செயலாளர் கே.ரவிசங்கர், கிளை நிறைவேற்று அதிகாரி எஸ்.குகன், முக்கிய பிரமுகர்களான இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவரும், பதில் நீதவானுமாகிய அன்ரன் புனிதநாயகம், தேசிய தலைமையகத்தின் மத்திய ஆளுனர் சபை அங்கத்தவர் சாள்ஸ் கொரையா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X