2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மரப்பட்டறை நடத்திய இருவர் கைது

Kogilavani   / 2014 மே 04 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முறிப்பு கிராமத்தில் சட்டவிரோதமாக மரப்பட்டறையை நடத்தி வந்ததாகக் கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்த சட்டவிரோத மரப்பட்டறை இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள  வீட்டை சோதனையிட்ட போது தேக்கு மரக்குற்றிகள் சிலவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அங்கு பணிபுரிந்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X