2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தீ விபத்தில் ஒருவர் காயம்: கடை எரிந்து நாசம்

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(4)  நள்ளிரவு இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மின்சார உபகரண விற்பனை நிலையமொன்று முற்றாக எரிந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முள்ளியவளை பிரதேசத்தில் இயங்கி வந்த மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞர் ஒருவர் வழமை போன்று ஞாயிற்றுக்கிழமை(4) இரவு கடையை மூடிவிட்டு கடைக்குப் பின்னால் உள்ள வீட்டில் தூங்கியுள்ளார்.

நள்ளிரவு 2 மணியளவில் கடை தீப்பற்றி எரிந்துள்ளதுடன் கடையுடன் இணைந்திருந்த வீட்டுத் தொகுதிக்கும் தீப்பரவ தொடங்கியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து வெளியேற முற்பட்டபோது இளைஞன் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் மேற்படி இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் குறித்த கடை முற்றாக எரிந்துள்ளதுடன்,  கடையுடன் சேர்ந்திருந்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்நிலையத்தில் சுமார் 40 இலட்சத்திற்கும் அதிகமான மின் உபகரணங்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளியவளை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X